'ஒருத்தர் அரசியலுக்கு எதுக்கு வந்திருக்கிறார் என்று தெரியவில்லை... முதலீடு செய்து லாபம் கொழிக்கும் தொழிலாக அரசியல் மாறிவிட்டது'- சீமான்
முதலீடு செய்து லாபம் கொழிக்கும் தொழிலாக அரசியல் மாறிவிட்டது. இப்போ ஒருத்தர் எதுக்கு வந்துருக்கிறோம் என்று கூட தெரியாமல் வந்திருக்கிறார். சின்னம் எது என்றால் முகம் என்கிறார் என விஜய்யை மறைமுகமாக சீமான் விமர்சித்தார்.
புதுச்சேரி தட்டாஞ்சாவடி ஒழுங்கு முறை விற்பனை கூட திடலில் நாம் தமிழர் கட்சி சார்பில் புதுச்சேரி மாநில நாம் தமிழர் கட்சியின் 28 தொகுதிக்கான வேட்பாளர்களை அக்கட்சியின் ஒருங்கினைப்பாளர் சீமான் அறிமுகப்படுத்தினார். அப்போது கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கினைப்பாளர் சீமான், “புதுச்சேரி தமிழ்நாட்டில் எல்லாவற்றிற்கும் இலவசம் என்பது வாழ்க்கை தரத்தை உயர்த்தாது. இந்திய கட்சிகளுக்கு மும்மொழி கொள்கை திராவிட கட்சிகளுக்கு இருமொழி கொள்கை, தமிழ்மொழி தான் எங்கள் கொள்கை அரசியல் அடித்தளத்தை தகப்பது தான் நாம் தமிழரின் கோட்பாடு பல ஆண்டுகளாக ஆள் மாற்றம் ஆட்சி மாற்றம், அடிப்படை அமைப்பு அரசியல் அமைப்பு ஆட்சி முறை மாற்றம் வேண்டும், ஊழல்,லஞ்சம், கொலை கொள்ளை எல்லாம் தெரிகிறது அறம்சார்ந்த ஆட்சி வேண்டும்.
நான் சொல்லும் எச்சில் இருந்து தான் பலர் கட்சி நடத்துகிறான். புதுச்சேரி மாநிலத்திற்கு தனி மாநில அந்தஸ்து வேண்டுமென 16 முறை சட்டசபையில் தீர்மானம் போட்டு இருக்கிறாங்க, இதுல வேற மத்திய அரசுடன் இங்கு கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. கூட்டம் அரசியல் ஆகாது கொள்கை தான் அரசியலாகும். வாக்குகளை வாங்குவது,வாக்குகளுக்கு பணம் பெற கூடாதென மக்கள் நினைக்க வேண்டும். முதலீடு செய்து லாபம் கொழிக்கும் தொழிலாக அரசியல் மாறிவிட்டது. தமிழ்நாடு தேர்வாணையம் உள்ளது போல் புதுச்சேரிக்கு தேர்வாணையம் உருவாக்க வேண்டும். இப்போ ஒருத்தர் எதுக்கு வந்துருக்கிறோம் என்று கூட தெரியாமல் வந்திருக்கிறார். சின்னம் எது என்றால் முகம் என்பார். நாம் தமிழர் கட்சி தனித்து நின்று போடியிடும். நாங்கள் மக்களோடு கூட்டணி வைத்துள்ளோம். வேளாண் குடிமக்கள் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், ஒவ்வொரு முறையும் கடன் தள்ளுபடி செய்யப்பட்டாலும் ஏன் விவசாயி மட்டும் கடனாளியாக உள்ளான். உற்பத்தி செய்யும் வேளாண் பொருட்களின் விலையை நிர்ணயிக்க முடியவில்லை இந்த நிலையை மாற்ற வேண்டும்” என்றார்.