×

“மகளிருக்கு கூடுதலாக ரூ.1,000 வழங்கினால் மாநில கடன் ரூ.15 லட்சம் கோடியாக உயரும்” - சீமான்

 

ஏற்கனவே கடன் உள்ள நிலையில் ஏன் இலவசத்தை மட்டுமே அறிவிக்கிறீர்கள்? என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “ஏற்கனவே கடன் உள்ள நிலையில் ஏன் இலவசத்தை மட்டுமே அறிவிக்கிறீர்கள்? பயணம் செய்யும் வகையில் பேருந்துகள் இல்லை. அதிமுகவின் வாக்குறுதியை எப்படி நல்லதென சொல்ல முடியும்? இலவசங்களால் தமிழகத்தில் எந்தவொரு வளர்ச்சியும் இருக்காது. சொந்தவீடு இல்லாதவர்களுக்கு வீடு பழைய திட்டம்தான். இலவசமாக கொடுக்கும் ரூ.2,000 வேண்டாம், 20 ஆயிரம் சம்பாதிக்க திட்டம் தீட்டிக்கொடுங்கள் எடப்பாடி பழனிசாமி ஆவர்களே. ஏற்கனவே போக்குவரத்துத்துறை ஒரு லட்சம் கோடி ரூபாய் இழப்பில் செல்கிறது.

இனி ஆண்களுக்கும் சலுகை கொடுத்தால் அந்த செலவை எங்கிருந்து எடுப்பார்கள்? அம்மா ஆட்சி வந்தால் அம்மா வீடு.. ஐயா ஆட்சி வந்தால் ஐயா வீடு. அரசு பேருந்துகளில் தலைவர்கள் பயணிப்பார்களா? தற்போதைய அரசு பேருந்துகள் தரமாக உள்ளதா? மகளிருக்கு கூடுதலாக ரூ.1,000 வழங்கினால் மாநில கடன் ரூ.15 லட்சம் கோடியாக உயரும், ஆண்களுக்கு இலவச பேருந்து சேவை வேண்டும் என்று யாராவது கேட்டார்களா? கூட்டணி அமைத்தால் மக்களின் நம்பிக்கையை இழப்போம், அதனால் கூட்டணி வேண்டாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. கூட்டணிக்கு அழைப்பு வருகிறது. ஆனால் நான் ஏற்றுக் கொள்ளவில்லை. கூட்டணி வைத்ததால் தான் தே.மு.தி.கவின் வாக்கு சதவீதம் குறைந்தது. ஆகவே நான் அதை செய்யவே மாட்டேன்” என்றார்.