“1 கோடி பேர் வாக்குரிமையை இழப்பர்”- சீமான் எச்சரிக்கை
குறைந்தது ஒரு கோடி பேர் தங்களது வாக்குரிமையை இழப்பார்கள் என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் SIR பணிகளுக்கு எதிராக நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “ஒரே மாதத்தில் 6 கோடி வாக்காளர்களை எப்படி சரி பார்க்க முடியும்? ஓராண்டு கால அவகாசம் எடுத்து SIR பணிகளை செய்திருக்க வேண்டும். குறைந்தது ஒரு கோடி பேர் தங்களது வாக்குரிமையை இழப்பார்கள். முன்பு வாக்காளர்கள் ஆட்சியாளர்களைத் தேர்வுசெய்தனர். இப்போது ஆட்சியாளர்கள் வாக்காளர்களைத் தேர்வு செய்கின்றனர். இதுதான் SIR.
SIR -ஐ அவசர அவசரமாக கொண்டு வருவது ஏன்? திடீரென போலி வாக்காளர்களை கண்டு பிடித்தது போல பேசுவது ஏன்?கொளத்தூரில் போலி வாக்காளர்கள் இருக்கிறார்கள் எனில் வெற்றி செல்லாது என அறிவித்தார்களா? ஈரோடு இடைத்தேர்தலில் கள்ள ஓட்டு போடப்பட்டது தேர்தல் ஆணையத்திற்கு தெரியாதா? மொத்தமுள்ள அனைவருக்கும் மீண்டும் வாக்காளர்கள் பரிசோதனை என்பது ஏற்க முடியாது. எங்களைப் போன்ற வளர்ந்துவரும் கட்சியினர் SIR-ஐ எப்படி எதிர்கொள்ள முடியும்? ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்களுக்கான வாக்காளர்களை தேர்ந்தெடுக்கின்றனர்” என்றார்.