“தெருவுக்குத் தெரு மதுபான கடைகள்... இதுல எப்படி 3 குழந்தைகளை பெற்றுக்கொள்வது?”- சீமான்
இந்தியர்கள் 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ள RSS தலைவர் மோகன் பகவத் வலியுறுத்திய நிலையில், தெருவெல்லாம் போதையும் சாராயமும் விற்றுக் கொண்டு 3 பிள்ளை பெற்றுக்கொள் என்றால் எப்படி பெறுவான்? என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “இந்தியர்கள் 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ள RSS தலைவர் மோகன் பகவத் கூறுகிறார். இவர் சொன்னதும் 3 பிள்ளைகளை பெற்றுக் கொள்ள வேண்டுமா? அவரிடம் கேட்டுச் சொல்லுங்கள். இந்துக்கள் மட்டுமா? இஸ்லாமியர்களும் கிறித்தவர்களும் பெற்றுக் கொள்ளலாமா என்று. தெருவுக்குத் தெரு மதுபானக் கடைகள் , போதை பொருட்கள் என தலைவிரித்து ஆடுகிறது . திறனற்று கிடக்கிறான் . அதைப் பற்றி அவர் ஒன்று பேசல... தெருவெல்லாம் போதையும் சாராயமும் விற்றுக் கொண்டு 3 பிள்ளை பெற்றுக்கொள் என்றால் எப்படி பெறுவான்? நான் என்ன சாப்பிட வேண்டும், என்ன உடை உடுத்த வேண்டும், என்ன மதத்தில் இருக்க வேண்டும், என்னை எரிக்கணுமா, புதைக்கணுமா? இதெல்லாம் சொல்றது உங்கள் வேலை அல்ல.
அதிக வரி விதிப்பால் நெசவு தொழில் பாதிப்பு அடைகிறதே? நெசவுத்தொழில் மட்டுமல்ல அனைத்து தொழில்களும் பாதிப்படையும். மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சியை இந்தியா சந்திக்கும். இப்படியே சென்றால் அன்று பங்களாதேஷ் மற்றும் இலங்கை போல பெரும் கிளர்ச்சி இந்தியாவிலும் ஏற்படும். உங்களுடன் ஸ்டாலின் நிகழ்வில் பெறப்பட்ட மனுக்கள் சாக்கடையில் கிடக்கிறது. இதுதான் திராவிட மாடல் ஆட்சி. இன்னும் இந்த ஆட்சியில் பிரச்சனைகள் இருக்கிறது அதன் மனுக்கள் சாக்கடையில் கிடக்கிறது.எந்தப் பதவியிலும் இல்லாமல் நாட்டு மக்களுக்காக பெரும் தொண்டாற்றிய தலைவர் ஐயா நல்லக்கண்ணு அவர்கள்” என்றார்.