×

"உங்க கொள்கைக்கும் எங்க கொள்கைக்கும் ஓராயிரம் கி.மீ தூரம்"... விஜயுடனான கூட்டணி குறித்த கேள்விக்கு சீமான் பதில்

 

உலகத்துலயே எங்கள மாதிரி தோற்று, கூட்டணி போகாத கட்சி இல்ல என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “கோயில் ஊழியர் அஜித்குமார் கொலை சம்பவத்தை கண்டித்து மடப்புரத்தில் தடையை மீறி போராடுவேன். போராட்டம் நடத்த அனுமதி மட்டும்தான் கேட்டோம், பாதுகாப்பு கேட்கவில்லை. நாட்டிற்கே நாங்கள் தான் பாதுகாப்பு. எங்களுக்கு எதற்கு பாதுகாப்பு? தடையை மீறி கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கும், வழக்கு போடுங்கள். மடப்புரத்தில் மொட்டை மாடியில் நின்றாவது போராடுவோம்.

உலகத்துலயே எங்கள  மாதிரி தோற்று, கூட்டணி போகாத கட்சி இல்ல! எங்க கொள்கைக்கும் தவெகவின் கொள்கைக்கும் 1,000 கி.மீ தூரமிருக்கிறது. விஜய் கட்சிக்கு விஜய்தானே முதலமைச்சர் வேட்பாளராக இருக்க முடியும். நான்கு முனைப் போட்டியல்ல. நாங்கள் தனிமுனைதான். மும்முனைப் போட்டி என அவர்கள் சரியாகதான் சொல்கிறார்கள். அந்த கட்சிகள் யாராவது மொழியை பற்றி பேசுகிறார்களா? என் நாடு, என் நிலம், என் வளம் என இந்த கட்சிகள் பேசுயிருக்கிறதா? அவர்கள் வாக்குகளை குறிவைக்கிறார்கள். ஆனால் நாங்கள் மட்டுமே நாட்டை பற்றி சிந்திக்கிறோம். எங்களுக்கு இந்த நிலத்தில் போட்டியே கிடையாது.வீட்டில்  சனாதனத்தை வைத்துகொண்டு, நாட்டில் ஒழிக்கிறேன்னு சொல்றீங்களே.. யார ஏமாத்துறீங்க? சமூக நீதினா என்னனு விளக்கி சொல்லிட்டு அப்பறம் சமூகநீதி விடுதிகள்னு அழைங்க” என்றார்.