×

"நடிகர் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா அப்பாவிகள்"- சீமான் பரபரப்பு பேட்டி
 

 

அதானி துறைமுகத்தில் போதைப்பொருள் சிக்கியபோது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், “என்னை பொறுத்தவரை நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் அப்பாவிகள். ஸ்ரீகாந்துக்கு போதை பொருள் விற்பனை செய்த நபர் அதிமுக பிரமுகர் என்பதால் போலீஸ் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதானி துறைமுகத்தில் போதைப்பொருள் சிக்கியபோது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது. போதைப்பொருள் கலாச்சாரம் என்பது இந்தியா முழுவதும் பரவி உள்ளது. ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகிய 2 பேர் மட்டும்தான் போதைப்பொருள் பயன்படுத்துகிறார்களா?

சினிமா வட்டாரத்தில் நடக்கும் கொக்கைன் விருந்துகள் குறித்து பாடகி சுசித்ரா கூட பேசியிருக்கிறார். கள் உணவின் ஒரு பகுதி என இந்திய மருத்துவ கழகம் கூறுகிறது. தமிழ்நாட்டில் மட்டும் கள்ளுக்கு தடை ஏன்? கள் மது என்றால் டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படுவது என்ன? பாமக விரிசலை சிமெண்டால் அல்ல, அன்பால் பூச வேண்டும்” என்றார்.