☰
×

"தவெக வேட்பாளர்களை தோற்கடித்து... தெருவில் ஓட விடணும்”- சீமான்

 

காங்கிரஸ கூட சேர்த்துக்கலாமா அண்ணா என்று நீங்க(முதல்வர் விஜய்) கேட்டப்ப வேண்டாவே வேண்டாம் என்று சொன்னேன்.. காங்கிரஸ் தமிழ் பேரினத்தின் வரலாற்று எதிரி என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

மதுராந்தகம் தொகுதி நாதக வேட்பாளர் ஜானகிராமனை ஆதரித்து  பரப்புரை மேற்கொண்ட அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “திமுக, அதிமுகவை ஒழிக்க 15 ஆண்டுகள் போராடினேன். தற்போது தவெகவை ஒழிக்க மேலும் போராடும் நிலை. மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் ஏன் என்பதை அறிவார்ந்த மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். காங்கிரஸ் என்பது தமிழ் இனத்தின் எதிரி: பாஜக மனிதகுலத்தின் எதிரி. காங்கிரஸ கூட சேர்த்துக்கலாமா அண்ணா என்று நீங்க(முதல்வர் விஜய்) கேட்டப்ப வேண்டாவே வேண்டாம் என்று சொன்னேன்.. காங்கிரஸ் தமிழ் பேரினத்தின் வரலாற்று எதிரி. நடித்தால்தான் ஓட்டு போடுவார்கள் என்றால் நான் நடிக்கப் போகிறேன். தவெக வேட்பாளர்களை தோற்கடித்து... தெருவில் ஓட விடணும்” என்றார்.