×

தேசிய விருதை வென்றுள்ள தமிழ் திரையுலக படைப்பாளிகளுக்கு சீமான் வாழ்த்து 

 

தேசிய விருதை வென்றுள்ள  தமிழ் திரையுலக படைப்பாளிகளுக்கு சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது சமூகவலைத்தள பக்கத்தில் , 69வது தேசிய திரைப்பட விருதுகளுக்கானப் பட்டியலில், ‘கடைசி விவசாயி’ திரைப்படத்துக்கு சிறந்தப் படத்துக்கான விருதும், அப்படத்தில் சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்திய மறைந்த ஐயா நல்லாண்டி அவர்களுக்கு சிறப்புப்பிரிவில் நடிப்புக்கான விருதும் அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் மகிழ்வினைத் தருகிறது. அப்படத்தை இயக்கிய சிறந்ததொரு படைப்பாளி எனது பாசத்திற்குரிய இளவல் மணிகண்டன் அவர்களுக்கும், தயாரித்த தனித்துவமிக்க திரைக்கலைஞன் அன்புத்தம்பி விஜய் சேதுபதி அவர்களுக்கும் எனது வாழ்த்துகளும், பாராட்டுக்களும்!