படிச்சவன் , படிக்காதவன் அனைவருக்கும் அரசு வேலை- சீமான்
படிச்சவன் , படிக்காதவன் அனைவருக்கும் அரசு வேலை வழங்கப்படும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை (தனி) சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சண்முகபிரியாவை ஆதரித்து ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று திருப்புவனத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அவர் பேசுகையில் " படிச்சவன், படிக்காதவன் அனைவருக்கும் கவர்மெண்ட் வேலை , 10 பைசா செலவின்றி படிப்பு என் பொறுப்பு, யாருக்கும் இலவசம் கிடையாது, 1000, 2000 தரமாட்டேன் என பேசியவர் திடீரென டிராக் மாறி சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு பற்றி 40 நிமிடம் மதிய வெயில் நோத்தில் பேசினார். 70 சதவிகிதம் கடல், 30 சதவிகிதம் நிலம், மரங்கள் அடர்த்தியாக இருந்தால் தான் மழை பெய்யும் . நிலத்தில் உள்ள நீர் ஆவியாகி மேலே செல்லும் அதனை மலைகள் தடுத்து நிறுத்தி மழை பெய்ய வைக்கும் , மரம் வளர்த்தால் பிராக்டிகல் மார்க் என சகல வாக்குறுதிகளையும் அளித்தார் மதியம் 12.30 மணிக்கு தொடங்கி 1.45 மணி வரை சுற்றுப்புற சூழல், மரம் வளர்ப்பு என ஏராளமாக உரையாற்றினார்.