×

திண்டுக்கல் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு; நபர் விடுதலைக்கு சீமான் எதிர்ப்பு!

திண்டுக்கல் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் சிக்கிய நபர் விடுதலை செய்யப்பட்டதற்கு சீமான் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள குரும்பபட்டி கிராமத்தை சேர்ந்த 12 வயது சிறுமி கடந்த ஆண்டு, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டார். இந்த வழக்கில் கிருபானந்தன் என்பவரை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் தொடர்பான வழக்கு திண்டுக்கல் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், அண்மையில் தீர்ப்பு வழங்கப்பட்டது. வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட கிருபானந்தன் குற்றவாளி
 

திண்டுக்கல் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் சிக்கிய நபர் விடுதலை செய்யப்பட்டதற்கு சீமான் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள குரும்பபட்டி கிராமத்தை சேர்ந்த 12 வயது சிறுமி கடந்த ஆண்டு, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டார். இந்த வழக்கில் கிருபானந்தன் என்பவரை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் தொடர்பான வழக்கு திண்டுக்கல் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், அண்மையில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட கிருபானந்தன் குற்றவாளி என்பது நிரூபிக்கப்படாததால் அவரை விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. மகிளா நீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு உரிய தண்டனை பெற்றுத்தர தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அந்த நபர் விடுதலை செய்யப்பட்டிருப்பது ஜனநாயக துரோகம் என்றும் அவர்கள் மீதான தண்டனை சட்டங்களை கடுமையாக்கி விரைவில் தண்டனை வழங்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.