×

அடி தடி வழக்கிலிருந்து சீமான் விடுவிப்பு - திருச்சி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு

 

அடி தடி வழக்கிலிருந்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை விடுவித்து திருச்சி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

2018 ஆம் ஆண்டு திருச்சி விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியினர்- மதிமுகவினர் இடையே தகராறு ஏற்பட்டு மோதலாக வெடித்தது. சீமான் தூண்டுதலில் மதிமுகவினர் மீது நாம் தமிழர் கட்சியினர் தாக்குதல் நடத்தியதாக வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பாக சீமான் உள்ளிட்ட இருதரப்பையும் சேர்ந்த 19 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சீமான் உள்ளிட்ட 19 பேரையும் விடுவித்து திருச்சி மாவட்ட இரண்டாவது கூடுதல் நீதிமன்றம் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.