☰
×

ரகசியமாக நடந்த திருமணம்? வைரலாகும் பிரியா பவானி சங்கரின் வெட்டிங் போட்டோஸ்!

 

பிரியா பவானி சங்கர் கடந்த 2017 ம் ஆண்டு வெளியான "மேயாத மான்" திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாபியா, களத்தில் சந்திப்போம், யானை, திருச்சிற்றம்பலம், பத்து தல, டிமான்டி காலனி 2 என அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

சமீபத்தில் ரவி தேஜா நடிப்பில் வெளியான "இருமுடி" திரைப்படத்தில் பிரியா பவானி சங்கரின் கதாபாத்திரமும், அவரது நடிப்பும் அனைவராலும் பாராட்டப்பட்டது. பிரியா பவானி சங்கர் நடித்த ‘டிமான்டி காலனி 3’ படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகவுள்ளது.

பிரியா பவானி சங்கரும் ராஜ்வேல் ராஜும் கல்லூரி காலத்திலிருந்தே ஒருவரையொருவர் அறிவர் என்பதும், கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக இருவரும் காதலித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஊடகங்கள் மற்றும் பொதுவெளியில் தங்களது காதல் உறவை வெளிப்படையாகவே இருவரும் எப்போதோ உறுதிப்படுத்தியிருந்தனர். சினிமா துறையில் பிசியாக இருந்தாலும் தங்களது தனிப்பட்ட உறவுக்கும் சமமான முக்கியத்துவம் கொடுத்து வந்த இந்த ஜோடி, தற்போது தங்களது உறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லத் தயாராகி வருவதாகத் தெரிகிறது.

கூடிய சீக்கிரம் பிரியா பவானி சங்கர் தனது காதலர் ராஜவேலுவை திருமணம் செய்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சத்தமே இல்லாமல் இன்று பிரியா பவானி சங்கரின் திருமணம் நடைபெற்று வீடியோ ஒன்றும் இணையத்தில் வெளியாகி உள்ளது.

அனிருத் திருமணமும் இன்று கிரீஸ் நாட்டில் நடைபெறவுள்ள நிலையில், அதே நாளில் நடிகை பிரியா பவானி சங்கரின் திருமணமும் நடைபெற்றுள்ளது.

இந்த ஆண்டு திருமணம் செய்துக் கொள்ளப் போகிறார் என தகவல்கள் வெளியான நிலையில், இன்று உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ திருமணத்தை நடத்தி முடித்துள்ளார் பிரியா பவானி சங்கர். பல வருட கனவு நனவான தருணமாக பிரியா பவானி சங்கர் கழுத்தில் ராஜவேல் தாலி கட்டும் வீடியோ வெளியாகி தீயாக பரவி வருகிறது. ரசிகர்கள் பலரும் பிரியா பவானி சங்கருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Marriage💍 Priya Bhavani Shankar tied the knot with her longtime boyfriend Raj Velu💥 https://t.co/YSRRQkZ63o

— Christopher Kanagaraj (@Chrissuccess) November 11, 2026


 

Marriage💍 Priya Bhavani Shankar tied the knot with her longtime boyfriend Raj Velu💥 https://t.co/YSRRQkZ63o

— Christopher Kanagaraj (@Chrissuccess) November 11, 2026