☰
×

தவெகவுக்கு எதிராக சீக்ரெட் பிரச்சாரம்- துருப்புச்சீட்டான பாமக 

 

மதுராந்தகம் இடைதேர்தலை பொறுத்தவரை வன்னியர் சமூகத்தின் வாக்குகள் தான் இப்போது துருப்பு சீட்டு. அதனை எதிர்க்கட்சிகள் பக்கம் கொண்டு வர சில ரகசிய வழிகளில் அணுகியுள்ளனர்.

அதாவது, பாமகவின் கிளைக்கழக நிர்வாகிகளிடம், "தவெகவுக்கு போடும் ஒவ்வொரு ஓட்டும், திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகளுக்கு போடும் ஓட்டுக்கு சமம். இந்த தொகுதியில், தவெக ஜெயித்தால், எங்களால் தான் பட்டியிலினவாக்குகளால் தான் தவெக ஜெயித்தது என விஜய்யிடம் க்ளைம் பண்ணுவார்கள். இதனால், தவெக ஆட்சி அதிகாரத்தில் திருமாவின் கை ஓங்கும். அது எதிர்காலத்தில் பாமகவின் வளர்ச்சிக்கும் அரசியல் செயல்பாடுகளுக்கும் தடையாக இருக்கும். அதனால், உங்கள் தலைமையே (பாமக) தவெகவுக்கு ஓட்டுப்போட சொல்லி அட்வைஸ் செய்தால் கூட நீங்கள் போட்டு விடாதீர்கள். மதுராந்தகத்தில் தவெக ஜெயித்தால் அது திருமா ஜெயித்த மாதிரி. அதனால் யோசித்து முடிவு செய்யுங்கள்" என்று மிக அழுத்தமாக எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர்

இதே பாணியை வன்னியர் சமூகத்திடமும், பட்டியலினத்தவர் அல்லாத பிற சமூகத்தினரிடமும் சொல்லி வாக்குகளை சீக்ரெட்டாக செய்து வருகிறோம். இதற்கு நல்ல ரெஸ்பான்ஸ் இருக்கிறது " என்று கூறுகின்றனர்.