சென்னையில் 5வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டம்
“சம வேலைக்கு சம ஊதியம்" வேண்டி அரசு பள்ளி இடைநிலை ஆசிரியர்கள் ஐந்தாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
“சம வேலைக்கு சம ஊதியம்" வேண்டி அரசு பள்ளி இடைநிலை ஆசிரியர்கள் இன்று எழும்பூர் வட்டார கல்வி அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை காவல்துறையினர், ஆசிரியர்களுக்கு போராடுவதற்கான இடம் மற்றும் அனுமதி கொடுக்காததன் காரணமாக பல்வேறு பொது இடங்களில் ஆசிரியர்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர். டிசம்பர் 26 ஆம் தேதி நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். டிசம்பர் 27ஆம் தேதி எழும்பூரில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். டிசம்பர் 28 சென்னை பாரிமுனையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். டிசம்பர் 29 காமராஜர் சாலை எழிலகம் அருகே சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.