கம்யூனிஸ்ட், மதிமுகவுக்கு சீட் குறைப்பு?
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, மதிமுக கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் என கேள்வி எழுந்துள்ளது.
சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் சூழலில், கூட்டணி பேச்சுவார்த்தையில் திமுக மற்றும் அதிமுக கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றன. அந்த வகையில், நீண்ட இழுபறிக்கு பின் காங்கிரஸ் உடனான ஒப்பந்தம் நேற்று ஒருமனதாக எட்டப்பட்டது. திமுக கூட்டணிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேசமயம் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, மதிமுக கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் என கேள்வி எழுந்துள்ளது.
கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 4 தொகுதிகள் ஒதுக்கப்படும் என முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மதிமுகவுக்கு 4 தொகுதிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த முறை 4 கட்சிகளும் தலா 6 தொகுதிகளில் போட்டியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.