×

தேர்தல் முடிவின்போது குதிரை பேரத்திற்கு வாய்ப்பு- விஜய் அவசர ஆலோசனை

 

சென்னை பனையூர் அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் 234 வேட்பாளர்களுடன் அக்கட்சி தலைவர் விஜய் ஆலோசனை மேற்கொண்டுவருகிறார்.

தவெக சார்பில் சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுடன் அக்கட்சியின் தலைவர் விஜய் ஆலோசனை மேற்கொண்டுவருகிறார். மே 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையின்போது என்னென்ன நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பது குறித்து விஜய் கூட்டத்தில் அறிவுறுத்தவுள்ளார். தேர்தல் முடிவின்போது குதிரை பேரத்திற்கான அச்சுறுத்தல் இருப்பதால் அதுகுறித்து முக்கிய முடிவு எடுக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும்  தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கையின் போது கவனமாக இருப்பது மற்றும் வேட்பாளர்களின் செயல்பாடுகள் குறித்து பனையூர் அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்களுடன் தலைவர் விஜய் அவர்கள் இன்று ஆலோசனை நடத்தினார்.