கனமழை- தருமபுரியில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை
கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து தருமபுரியில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், தருமபுரி மாவட்டம் முழுவதும் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. குறிப்பாக வேப்பம்பட்டியில் 130 மி.மீ மழை பொழிந்தது ஆனால் 7.2 மி.மீ என பதிவாகி உள்ளது. அருகே உள்ள தீர்த்தமலை 176 மி.மீ பதிவாகி உள்ளது. சித்தேரி 25 மி.மீ அருகே உள்ள சூர்யகடையில் 114.8 மி.மீ பதிவாகி உள்ளது. வடகிழக்கு பருவமழையையொட்டி பேரிடர் பாதிப்பு கட்டுப்பாட்டு அறைக்கு புகாரளிக்க உதவி எண்களை அறிவித்த மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் - 1077, 04342-231077, 231500 மற்றும் 04342-230067 என்ற எண்ணிலும் புகார் அளிக்கலாம். அவசரத் தேவைகள், உதவிகள் தொடர்பாக புகார் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தருமபுரி மாவட்டத்தில் சமீபகாலமாக பெய்து வரும் மழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகள், குளங்கள், அணைகள் போன்ற நீர் நிலைகள் பல இடங்களில் 50 சதவீதத்திற்கு மேல் நிரம்பி உள்ளன. பலத்த மழை காரணமாக இலக்கியம்பட்டி பகுதியில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து தருமபுரியில் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறையை ஈடு செய்யும் விதமாக நவம்பர் 15 ஆம் தேதி வேலை நாளாக அறிவித்து மாவட்ட ஆட்சியர் சதீஸ் உத்தரவிட்டுள்ளார்.