×

வேளாங்கண்ணி திருவிழா- நாகையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை 

 

 

நாகபட்டினம் மற்றும் கீழ்வேளூர் வட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் ஆரோக்கிய அன்னையின் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு  ஆகஸ்ட் 27ஆம் தேதி கொடியேற்றம் தொடங்கி செப்டம்பர் 10 ஆம் தேதி வரை ஆரோக்கிய அன்னைக்கு திருவிழா நடைபெறுகிறது. இத்திருவிழாவை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம், தமிழ்நாடு லிமிடெட் மூலமாக பல்வேறு ஊர்களில் இருந்து 1058 சிறப்பு பேருந்துகள்  இயக்கப்பட உள்ளது

இந்நிலையில் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா திருவிழாவை முன்னிட்டு நாகபட்டினம் மற்றும் கீழ்வேளூர் வட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.