×

பள்ளிகளுக்கு ஆன்லைன் வகுப்பு... கல்லூரிகளுக்கு ஜன.20 வரை விடுமுறை - தமிழக அரசு அறிவிப்பு...

 

மருத்துவ மற்றும்‌ துணை மருத்துவக்‌ கல்லூரிகள்‌ தவிர அனைத்துக்‌ கல்லூரிகளுக்கும் ஜன.20 வரை விடுமுறை அளித்து  தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக ஏற்கனவே கடந்த 31 ஆம் தேதி வரை அமலில் இருந்த ஊடரங்கு கட்டுப்பாடுகள் ஜனவரி 10 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தினசரி பாதிப்பு அதிகரித்த வண்ணமே உள்ளது. இதனைக் கட்டுப்படுத்த  கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய கட்டாயத்தில் தமிழக அரசு இருந்தது.. இதனையடுத்து இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

கூட்டத்தில்,  பள்ளிகளில் ஆன்லைன் வகுப்பு, இரவு நேர ஊரடங்கு போன்றவை பரிந்துரைக்கப்படுள்ளன. இதனையடுத்து  தமிழகத்தில் ஏற்கனவே இருந்த நடைமுறைகளுடன் கூடுதல் கட்டுப்பாடுகள் விதித்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.  அதன்படி , தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 9ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் நடத்த அனுமதி தடை விதிக்கப்பட்டுள்ளது.  ஆன்லைன் வழியில் பாடம் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளாது. மேலும் , 10, 11 மற்றும்  12 ஆகிய வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு தயாராகி வருவதால், அவர்களின் எதிர்கால நலன் கருதியும்,  தடுப்பூசி பெற்றுக் கொள்ள எதுவாகவும்  நேரடி வகுப்புகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல்  அரசு ,  தனியார் மருத்துவ மற்றும் துணை மருத்துவ கல்லூரிகள் தவிர,  தமிழகத்தில் உள்ள  அனைத்து கல்லூரிகள் மற்றும்  தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணவர்கள் தேர்வு எழுதும் பொருட்டு ஜனவரி 20ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும்  நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பயிற்சி மையங்கள் செயல்படவும் தடை விதிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஏற்கனவே டெல்லி, மஹாராஷ்டிரா, ஹரியானா, உத்தரப்பிரதேசம், தெலங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் கொரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது..