‘காதல் இல்லை காமம்’- பள்ளி தாளாளரின் மன்மத லீலையால் தனியார் பள்ளி ஆசிரியர் தற்கொலை
விருத்தாசலம் அருகே தனியார் பள்ளி ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை இந்த நிலையில் அந்த பள்ளி ஆசிரியர் மற்றும் தாளாளரின் மகன் பேசும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே விஜயமாநகரம் கிராமத்தைச் சேர்ந்த ராஜவேல். இவரது மகள் ராதிகா (வயது 35). இவர் வீராரெட்டிகுப்பம் கிராமத்தில் உள்ள புனித ஆங்னேஷ் தனியார் பள்ளியில் எல்கேஜி ஆசிரியராக கடந்த 10 ஆண்டுகள் மேலாக பணியாற்றி வருகிறார். இந்தப் பள்ளியை ஜேசுதாஸ் ராஜா என்பவர் நடத்தி வருகிறார் இவர். தற்போது அவருக்கு உடல்நிலை குறைவால் அவரது மகன் பிரின்ஸ் நவீன் பார்த்து வருகிறார். இந்த நிலையில் அந்தப் பள்ளியில் பணியாற்றும் எல்கேஜி ஆசிரியர் ராதிகா பிரின்ஸ், நவீன் இரண்டு பேரும் காதலித்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த 17-ஆம் தேதி ராதிகா செல்போனில் யாருடனோ பேசிக்கொண்டே தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து ராதிகாவின் தந்தை ராஜவேல் மங்கலம்பேட்டை காவல் நிலையத்தில் தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், தனது மகளிடம் யாரோ செல்போனில் பேசியதால் அவர் தற்கொலை செய்து கொண்டார் எனவும் மங்கலம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் மங்கலம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் இறந்து போன ராதிகாவின் செல்போனில் தாளாளரின் மகன் பிரின்ஸ் நவீன் ராதிகாவுடன் முத்தம் கொடுத்து இருக்கும் வீடியோவும் மற்றும் ராதிகாவை பாலியல் சீண்டல் செய்த வீடியோவும் இருந்துள்ளது. அது மட்டுமல்லாமல் அந்தப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் பல பேர் பிரின்ஸ் நவீன்க்கு விருந்தாகியுள்ள ஆடியோ வெளியாகி உள்ளது. அங்கு பணியாற்றும் ஆசிரியைகள் ஒவ்வொரு ஆசிரியருடன் செல்போனில், ‘நீ நவீன் கூட படுத்தாய்... அவள் நவீன் கூட படுத்தாய், பெரிய சாருடன் படுக்கையில் படுத்தாய்’ என்று பகிரங்கமாக பேசும் ஆடியோ வெளியாகி உள்ளது. இந்தப் பள்ளியின் தாளாளர் மற்றும் தாளாளர் மகன்கள் அங்கு பணியாற்றும் ஆசிரியர்களிடம் மன்மத லீலையில் ஈடுபட்டு இருந்தது இந்த ஆடியோ மூலம் வெட்ட வெளிச்சமாக ஆகியுள்ளது.
இந்தப் பள்ளியில் விடுதி மற்றும் முதியோர் இல்லம் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே பள்ளியின் தாளாளர் ஜேசுதாஸ் ராஜா பள்ளியில் படிக்கும் மாணவியிடம் பாலியல் சீண்டல் செய்த வழக்கில் கைது ஆகியது குறிப்பிடத்தக்கது. அவர் மகன் மீதும் வழக்கு போடப்பட்டுள்ளது. இந்தப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களின் வாழ்க்கையை நாசமாக்கிய தாளாளர் மகன் ஆசிரியர்கள் பேசிக் கொள்ளும் ஆடியோவில் இருந்து தெரிய வருகிறது. இதனை முறையாக பள்ளிக்குச் சென்று அதிகாரிகள் விசாரணை செய்தால் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கும் அதே போல் அந்தப் பள்ளியில் எத்தனை ஆசிரியர்கள் வாழ்க்கை சீரழிந்ததோ என்பது விசாரணையில் தான் தெரிய வரும். மங்கலம்பேட்டை போலீசார் இறந்து போன ராதிகாவின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் ராதிகா தற்கொலைக்கு காரணமான பிரின்ஸ் நவீனை கைது செய்தனர்.