×

பள்ளி மாணவர்கள் செம குஷி..! இந்த மாதத்தில் மட்டும் 13 நாட்கள் விடுமுறை..!

 

தமிழக பள்ளிக் கல்வித்துறையின் 2026–27 ஆம் கல்வியாண்டுக்கான நாட்காட்டி மற்றும் அரசு விடுமுறைப் பட்டியலின்படி, இந்த மாதத்தில் அடுத்தடுத்து தொடர் விடுமுறைகளும், காலாண்டுத் தேர்வு விடுமுறையும் அமையவுள்ளன.


வருகிற செப்டம்பர் 4-ம் தேதி கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 5-ம் தேதி ஆசிரியர் தினம் சனிக்கிழமை மற்றும் செப்டம்பர் 6-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என வார இறுதி நாட்கள் வருவதால், செப்டம்பர் முதல் வாரத்திலேயே தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது. 


அதேபோல, செப்டம்பர் 12-ம் தேதி மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை மற்றும் செப்டம்பர் 13-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வழக்கமான விடுமுறை நாட்களாகும். அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 14-ம் தேதி (திங்கட்கிழமை) விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கான அரசு விடுமுறை வருகிறது. இதன் மூலம் பள்ளி மாணவர்களுக்குத் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடைக்கவுள்ளது.


பள்ளிக் கல்வித்துறையின் 2026–27 நாட்காட்டியின்படி, பள்ளி மாணவர்களுக்குக் காலாண்டுத் தேர்வுகள் முடிவடைந்து செப்டம்பர் 26-ம் தேதி முதல் காலாண்டு விடுமுறை தொடங்குகிறது. அக்டோபர் 4-ம் தேதி வரை காலாண்டு விடுமுறை ஆறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதத்தில் 5 நாட்கள் மற்றும் அக்டோபர் மாதத்தில் 4 நாட்கள் என மொத்தமாக 9 நாட்கள் மாணவர்களுக்குக் காலாண்டு விடுமுறை வழங்கப்படவுள்ளது.

அரசு விடுமுறைகள், வார இறுதி நாட்கள் மற்றும் காலாண்டு விடுமுறை என செப்டம்பர் மாதத்தில் மட்டும் 13 விடுமுறை நாட்கள் வருவதால், மாணவர்கள் மத்தியில் உற்சாகம் எழுந்துள்ளது. வெளியூர் பயணங்களுக்குத் திட்டமிடுவோர், தற்போதே தங்கள் பயணங்களுக்கான முன்பதிவுகளைத் தொடங்கி விட்டனர்.