பள்ளிகள் திறப்பு எப்போது?- பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு
Apr 9, 2026, 21:45 IST
கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1ம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஏப்ரல் 16 உடன் அனைத்து தேர்வுகள் முடிவடைகின்றன. ஏப்ரல் 17 முதல் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் கோடை விடுமுறை அறிவிக்கப்படுகிறது என்றும், கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1ம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் எனவும் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.