கல்லூரி மாணவியை கோயிலுக்கு கூட்டி சென்று கட்டாய தாலி- கேடாய் முடிந்த பள்ளி நட்பு
கும்பகோணம் அரசினர் கலைக்கல்லூரியில் பிஎஸ்சி மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவியை கடத்தி கட்டாய தாலி கட்ட முயன்ற நபரிடமிருந்து தப்பிய மாணவி கையில் ஏற்பட்ட காரணமாக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆடுதுறை அருகே மருத்துவகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரியங்கா (வயது 22) (வன்னியர்) இவர் கும்பகோணம் அரசினர் கலை கல்லூரியில் பிஎஸ்சி மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். திருமங்கலக்குடி அருகே குறிச்சிமலையைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (22) (பட்டியலினத்தவர்)தற்போது கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு BA படித்து வருகிறார். இவர்கள் இருவரும் ஐந்தாம் வகுப்பில் இருந்து 12 ஆம் வகுப்பு வரை ஆடுதுறையில் உள்ள குமரகுருபரர் மேல்நிலைப் பள்ளியில் ஒன்றாக படித்து வந்துள்ளனர். அதனால் இவர்களுக்குள் இருந்த பழக்கம் நட்பாக மாறி உள்ளது. ஒரு காலகட்டத்தில் பிரியங்கா பாலகிருஷ்ணனின் நட்பை முறித்துக் கொண்டுள்ளார். பிரியங்கா இன்று கல்லூரியில் இருந்த போது அவருக்கு தொலைபேசியில் பேசிய பாலகிருஷ்ணன், எனது அம்மா, அத்தை உறவினர்கள் வந்திருக்கிறார்கள். அவர்களிடம் நீ என்னை விரும்பவில்லை என்பதை கூறிவிட்டு செல் எனக்கூறி அழைத்துள்ளார்.அதனை நம்பி வகுப்பில் இருந்து வெளியே வந்துள்ளார் பிரியங்கா. பிரியங்காவிடம் பாலகிருஷ்ணன் மற்றும் அவரது தாய் மற்றும் உறவினர்கள் சண்டையிட்டுள்ளனர். கல்லூரி அருகில் சண்டையிட்டால் தனக்கு கவுர குறைச்சல் என நினைத்த பிரியங்கா சற்று தள்ளி போய் பேசலாம் எனக் கூறி உள்ளார்.
இதனை அடுத்து பாலகிருஷ்ணன் மற்றும் அவரது உறவினர்கள், பிரியங்கா ஆகியோர் மகாமக குளம் அருகில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு வந்துள்ளனர். பிரியங்கா தன்னை விட்டு விடுங்கள் என கெஞ்சி உள்ளார். இதனிடையே பாலகிருஷ்ணன் மறைத்து வைத்திருந்த மஞ்சள் கயிறை எடுத்து பிரியங்கா கழுத்தில் கட்ட முன்றுள்ளார். அதனை தடுத்த பிரியங்காவை பாலகிருஷ்ணன் மற்றும் அவரது உறவினர்கள் அடித்ததாக கூறப்படுகிறது. மேலும் பாலகிருஷ்ணன் பிரியங்காவின் கையை கடித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த அமளியால் கோவிலில் இருந்தவர்கள் பிரியங்கா மற்றும் அங்கு இருந்தவர்களை வெளியே செல்லும்படி தெரிவித்துள்ளனர். கோவிலை விட்ட வெளியே வந்ததும் பிரியங்காவை ஆட்டோவில் அழைத்துச் செல்ல முற்பட்டபோது பிரியங்காவின் மாமா தொலைபேசியில் அழைத்துள்ளார். காசி விசுவநாதர் கோயிலுக்கு உடனே வரும்படி பிரியங்கா தெரிவிக்கவே, காசி விசுவநாதர் கோயிலுக்கு வந்த பிரியங்காவின் மாமா பிரியங்காவை அழைத்து வீட்டுக்கு சென்றுள்ளார்.
பிரியங்கா கல்லூரி மற்றும் காசி விசுவநாதர் கோவிலில் நடந்த சம்பவங்களை தனது குடும்பத்தாரிடம் தெரிவிக்கவே, பிரியங்காவின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர், மேலும் கையில் ஏற்பட்ட காயம் காரணமாக பிரியங்காவை கும்பகோணம் அரசினர் பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரியங்காவிடம் காவல்துறையினர் நடந்தவற்றை வாக்குமூலமாக பெற்றனர். இதனை தொடர்ந்து கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தார் வழக்கு பதிவு செய்து தலை மறைவாக உள்ள பாலகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தாரை தேடி வருகின்றனர்.பிரியங்கா விற்கும் அவரது உறவுக்காரரான மணிகண்டன் என்பவருக்கும் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் இந்த சம்பவம் நடைபெற்று உள்ளது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. கும்பகோணம் அரசு மருத்துவமனையில் பிரியங்காவிற்கு துணையாக நிச்சயிக்கப்பட்ட மணமகன் பாதுகாப்பிற்காக உள்ளார்.