#BREAKING பள்ளி முழுஆண்டு தேர்வு அறிவிப்பு
Mar 20, 2026, 19:12 IST
1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முழுஆண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முழுஆண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 1 முதல் 3-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 8-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 16 வரை தேர்வு நடைபெறவுள்ளது. 4 மற்றும் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 6 முதல் ஏப்ரல் 16 வரையிலும், 6 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு ஏப்ரல் 1-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 16-ம் தேதி வரையிலும் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு முன்கூட்டியே தேர்வுகளை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக ஏப்ரல் 10 முதல் ஏப்ரல் 24-ம் தேதி வரை தேர்வுகளை நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது