×

பள்ளிக்கட்டண வழக்கு; 17 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவு

கொரோனாவால் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் பள்ளி, கல்லூரிகள் கல்விக் கட்டணத்தைச் செலுத்துமாறு மாணவர்களையோ அல்லது பெற்றோர்களையோ வற்புறுத்தக் கூடாது எனத் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அந்த அரசாணையில், நடப்பாண்டிற்கான மீதமுள்ள கல்விக் கட்டணத்தையோ, அல்லது அடுத்த கல்வியாண்டுக்கான கல்விக் கட்டணத்தையோ செலுத்துமாறு கல்வி நிறுவனங்கள் வற்புறுத்தக் கூடாது என்றும் இதனை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. தமிழக அரசின் இந்த அரசாணையை எதிர்த்து தமிழ்நாடு தனியார்ப் பள்ளி-கல்வி கூட்டமைப்புகள் சார்பில் பழனியப்பன் சென்னை
 

கொரோனாவால் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் பள்ளி, கல்லூரிகள் கல்விக் கட்டணத்தைச் செலுத்துமாறு மாணவர்களையோ அல்லது பெற்றோர்களையோ வற்புறுத்தக் கூடாது எனத் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அந்த அரசாணையில், நடப்பாண்டிற்கான மீதமுள்ள கல்விக் கட்டணத்தையோ, அல்லது அடுத்த கல்வியாண்டுக்கான கல்விக் கட்டணத்தையோ செலுத்துமாறு கல்வி நிறுவனங்கள் வற்புறுத்தக் கூடாது என்றும் இதனை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

தமிழக அரசின் இந்த அரசாணையை எதிர்த்து தமிழ்நாடு தனியார்ப் பள்ளி-கல்வி கூட்டமைப்புகள் சார்பில் பழனியப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். நேற்று அந்த வழக்கு விசாரணையின் போது, தனியார் கல்லூரிகளில் மூன்று தவணையாகக் கல்விக் கட்டணம் வசூலிக்க அனுமதிப்பதாகத் தமிழக அரசு சார்பில் தெரிவித்தது. அதனைத் தொடர்ந்து இன்று மீண்டும் நடந்த வழக்கு விசாரணையில், பள்ளிக்கட்டணம் வசூலிக்க கூடாது என்ற அரசாணைக்கு எதிரான இந்த வழக்கை 17 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.