×

பள்ளி மாணவர்கள் ஷாக்..! இனி இந்த 7 சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும்..!

 

புதுச்சேரி மாநிலத்தில் கடும் வெப்ப அலை காரணமாக மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்ட விடுமுறை நாட்களை ஈடுசெய்ய, பள்ளிகள் 7 சனிக்கிழமைகளில் செயல்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.


புதுச்சேரி பள்ளிகள் விடுமுறையில் மாற்றம் செய்து அம்மாநில அரசு சற்றுமுன் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், வெப்ப அலை காரணமாக அளிக்கப்பட்ட விடுமுறை நாள்களை ஈடு செய்யும் விதமாக 7 சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வகையில் ஜூலை 11, ஆகஸ்ட் 1, 22, செப்டம்பர் 5, 14, 28, மற்றும் அக்டோபர் 10 ஆகிய 7 சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.