×

பள்ளிக் கட்டிடங்கள் 3 வண்ணங்களாக பிரிப்பு : அமைச்சர் ஆதவ் அர்ஜுனா..!

 

தமிழகத்தில் அனைத்துப் பள்ளிக் கட்டிடங்களும் ஆய்வு செய்யப்பட்டு 3 வண்ணங்களாகப் பிரிக்கப்படுகின்றன. அவற்றின் கட்டிட பாதுகாப்பை உறுதிசெய்ய சிவப்பு, மஞ்சள், மற்றும் பச்சை என 3 வண்ண குறியீடுகளாக பிரிக்க உள்ளதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

அதன்படி, சிவப்பு நிறக் குறியீடு இடப்பட்ட பாதுகாப்பற்ற கட்டிடங்களுக்குச் சீல் வைக்கப்படும்; மஞ்சள் நிறக் குறியீடு சீரமைப்புப் பணிகளுக்கும், பச்சை நிறக் குறியீடு அடுத்த 5 ஆண்டுகளுக்குப் பாதுகாப்பான கட்டிடங்களுக்கும் வழங்கப்படுகிறது. தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகளை உயர்த்துவதே அரசின் இலக்கு என அமைச்சர் ஆதவ் தெரிவித்துள்ளார்.

ஆபத்தான 'சிவப்பு' குறியீடு கொண்ட கட்டிடங்கள் உடனடியாக சீல் வைக்கப்படும் என்றும், 'மஞ்சள்' குறியீடு கொண்ட கட்டிடங்களில் சீரமைப்பு பணிகளும், 'பச்சை' குறியீடு கொண்ட கட்டிடங்கள் அடுத்த 5 ஆண்டுகளுக்கு பாதுகாப்பானவையாகவும் வகைப்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.

மரத்தடிக்கு கீழே தான் நான் படித்திருக்கிறேன்.. மழை பெய்தால் Class நடக்காது.. தனது பள்ளி வாழ்க்கையை சட்டபேரவையில் கூறி கவனம் ஈர்த்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

CM Vijay | TN Assembly 2026 | JCD prabhakar | DMK#NewsTamil24x7 #MinisterAadhavarjuna pic.twitter.com/BZ5Dan84TY

— News Tamil 24x7 (@NewsTamilTV24x7) August 24, 2026