×

ஒமிக்ரான் எதிரொலி- 1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் காலவரையின்றி மூடல்

 

புதுச்சேரியில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படுவதாக கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவலின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வைரஸ் பரவலை கருத்தில் கொண்டு பல மாநிலங்கள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. அந்தவகையில், புதுச்சேரியில்  கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படுவதாக கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். அதே சமயம் ஆன்லைன் மூலம் தொடர்ந்து வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

புதுச்சேரியில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. கடந்த ஆண்டு செப்டம்பரில் 9 முதல் 12 ஆம் வகுப்புகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு நடந்து வருகின்றன. அதையடுத்து நவம்பரில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை திறக்க முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் மழையின் காரணமாக அந்த முடிவு தள்ளிபோனது. அதன்பின் கடந்த மாதம், 6 ஆம் தேதி முதல் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. ஒரு மாதமே பள்ளிகள் நடைபெற்ற நிலையில், தற்போது மீண்டும் ஒமிக்ரான் பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருப்பது குறிப்பிடதக்கது.