×

ஜிஎஸ்டி சாலையில் நாளை பள்ளி, கல்லூரி வாகனங்களை வழக்கம்போல் இயக்கலாம்!

 

ஜிஎஸ்டி சாலையில் பள்ளி கல்லூரி வாகனங்கள் வழக்கம் போல் செல்லலாம் என செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் கலந்து கொள்ள உள்ளதால் நாளை 23.01.2026 காலை 7.00 மணி முதல் மாலை 7.00 வரை ஜி.எஸ்.டி சாலை வழியாக செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் போக்குவரத்து வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டது. பள்ளி, கல்லூரி மற்றும் அவசர கால ஊர்திகள் வழக்கம் போலவே அதே பாதையில் செல்லலாம் என்று மாவட்ட ஆட்சியர் சினேகா தெரிவித்துள்ளார்.