×

8ஆம்  வகுப்பு மாணவர்களுக்கு உதவித்தொகை - முக்கிய அறிவிப்பு இதோ!

 

எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு உதவித்தொகை அறிக்கை மேற்கொள்ளப்படும் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்டம் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய வருவாய் மற்றும் திறன் படிப்பு உதவித் திட்டத்தின் கீழ் படிப்பு உதவித்தொகை எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு அளிக்கப்பட உள்ளது. இதற்காக வட்டார அளவில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு மாணவர்களை தெரிவு செய்து தேர்வு நடத்தப்படும். மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட அரசு ,மாநகராட்சி, நகராட்சி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவ -மாணவியர் அவர் தம் பெற்றோரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1.50  லட்சத்திற்கு மிகாமல் இருந்தால் இத்தேர்வை எழுதலாம்.

இந்நிலையில் தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் 8ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை பெறுவதற்கான தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வு (என்எம்எம்எஸ்) மார்ச் 5ம் தேதி நடைபெறுகிறது.இதற்கான விண்ணப்பங்களை ஜன.12(இன்று) முதல் ஜன.27ம் தேதி வரை http://dge.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். 

நிரப்பப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணத் தொகை ரூ.50ஐ சேர்த்து தாம் பயிலும் பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஜன.27ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அரசு தேர்வுகள் இயக்குநர் சேதுரமவர்மா தெரிவித்துள்ளார்.  கால தாமதமாக பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்றும் புறச்சரக பதிவு எண் கொண்ட தேர்வு எழுத தேர்வர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.