×

செம திட்டம்..! இனி சொகுசா ரயில் பெட்டியில் கம்மியான கட்டணத்திலேயே தங்கலாம்.! 

 

தமிழகத்தில் பல்வேறு சுற்றுலா தளங்கள் உள்ளது. அதிலும் ஆன்மிக சுற்றுலா இடங்கள் கொட்டிக்கிடக்கிறது. இதில் ராமேஸ்வரத் தீவானது ஆன்மிகத்திற்கு புகழ் பெற்றது. இங்கு 22 புனித தீர்த்தங்கள் உள்ளன, இவை பக்தர்களால் மிகவும் முக்கியமாகக் கருதப்படுகின்றன. அக்னி தீர்த்தம் கோயிலுக்கு அருகில் உள்ள கடற்கரை, புனித நீராடலுக்கு பயன்படுத்தப்படுகிறது. இது பக்தர்களுக்கு ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும்.

ராமேஸ்வரத்திற்கு தற்போது நாளுக்கு நாள் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் ராமேஸ்வரம் நகர் முழுவதும் ஏராளமான தங்கும் விடுதிகள் தொடங்கப்படுள்ளது. இருந் போதும் அதிக கட்டணங்களால் வெளியூரில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் தவிக்கும் நிலை உள்ளது. இதனை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே அசத்தலான திட்டத்தை தொடங்கவுள்ளது. இதற்கான டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் ரயில் பெட்டிகளை தங்கும் அறைகளாக மாற்றி பயணிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதற்காக ரயில் போக்குவரத்திற்கு பயன்படாத 5 ரயில் பெட்டிகள் ஒதுக்கப்படவுள்ளது. அந்த ரயில் பெட்டியில் உட்புறத்தில் சொகுசான விடுதிகள் போல் மாற்றங்கள் ண செய்து பயணிகளின் வாடகைக்கு விடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. 5 ஆண்டு கால ஒப்பந்த பணிக்கு ஒப்பந்ததாரர்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்தத்தை பெறுபவர்கள் ரயில் பெட்டிகளின் உட்புறத்தில் உரிய மாற்றங்கள் செய்து தங்கும் அறைகளாக்கும் பணியை மேற்கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து ரயில்வே சார்பாக நிர்ணயிக்கப்படும் கட்டணத்தை வசூலித்துக் கொள்ள வேண்டும் எனவும் இந்த மின்னணு ஒப்பந்தம் பற்றிய மேல் விவரங்களுக்கு www.ireps.gov.in என்ற இணையதளத்தை பார்க்கலாம் அல்லது 9003862967 என்ற அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மின்னணு ஒப்பந்தங்கள் ஜூலை 15 மதியம் 12 மணிக்குள் இணையதளம் வாயிலாக சமர்ப்பிக்கப்பட வேண்டும் என தெற்கு ரயில்வே அந்த அறிவிப்பில் தெரிவிக்கபட்டுள்ளது.