×

ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கோரிய வழக்கு 8 வாரங்களுக்கு ஒத்திவைப்பு..!!

 

ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க உத்தரவிட கோரிய மனுவை 8 வாரங்களுக்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

ஜம்மு & காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலின் போது ஜம்மு & காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என அரசியல் கட்சிகள் வாக்குறுதி அளித்திருந்தனர். இருப்பினும் தேர்தல் முடிந்து ஓராண்டாகும் நிலையில் இன்னும் ஜம்மு & காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கவில்லை. இந்நிலையில் ஜம்மு & காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க உத்தரவிடக்கோரின் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்த போது, பஹல்காமில் சமீபத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலை சுட்டிக்காட்டிய தலைமை நீதிபதி ஜம்மு & காஷ்மீரின் நிலைமையை கவனிக்காமல் விட முடியாது என கருத்து தெரிவித்தார். 

மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, தேர்தலுக்குப் பிறகு மாநில அந்தஸ்து வழங்கப்படும் என மத்திய அரசு உறுதியளித்திருந்தது! ஆனால் ஏன் இப்போது இந்த விவகாரம் இவ்வளவு பரபரப்பாக எழுப்பப்படுகிறது? என கேள்வி எழுப்பியதோடு, இந்த விவகாரத்தில் உரிய அறிவுறுத்தல்களை பெறுவதற்காக 8 வாரங்கள் அவகாசம் வேண்டும் என கோரிக்கை வைத்தார். இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மத்திய அரசு விவகாரத்தில் பதிலளிக்குமாறு கூறி வழக்கை 8 வாரங்களுக்கு ஒத்தி வைத்தார்.