×

“மண்ணில் இந்த காதலன்றி’ – மூச்சு விடாமல் எஸ்.பி.பி பாடவில்லை

மறைந்த பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கடந்த 50 ஆண்டுகளாக 17 மொழிகளில் 42 ஆயிரம் பாடல்களுக்கும் மேலாகப் பாடியவர். அவர் பாடிய பாடல்கள் அனைத்தும் காலத்தால் அழியாதவை. ஆயிரக்கணக்கான அவரது பாடல்களுக்கு தனிப்பட்ட சிறப்புகள் பல உண்டு. இதில் “கேளடி கண்மணி” படத்தில் வரும் “மண்ணில் இந்தக் காதலன்றி” என்ற பாடல், தமிழ் சினிமாவில் தனித்துவம் பெற்றதாகும். பாடல் முழுவதும் எஸ்.பி.பி. மூச்சு விடாமல் பாடியிருப்பார். இதில் கதாநாயகனும் அவரே.. இயக்குனர் வசந்த் இயக்கிய, இந்த படத்திற்கு
 


மறைந்த பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கடந்த 50 ஆண்டுகளாக 17 மொழிகளில் 42 ஆயிரம் பாடல்களுக்கும் மேலாகப் பாடியவர். அவர் பாடிய பாடல்கள் அனைத்தும் காலத்தால் அழியாதவை.

ஆயிரக்கணக்கான அவரது பாடல்களுக்கு தனிப்பட்ட சிறப்புகள் பல உண்டு. இதில் “கேளடி கண்மணி” படத்தில் வரும் “மண்ணில் இந்தக் காதலன்றி” என்ற பாடல், தமிழ் சினிமாவில் தனித்துவம் பெற்றதாகும். பாடல் முழுவதும்

எஸ்.பி.பி. மூச்சு விடாமல் பாடியிருப்பார். இதில் கதாநாயகனும் அவரே.. இயக்குனர் வசந்த் இயக்கிய, இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார்.
தற்பொழுது அவரது மறைவிற்கு பிறகு தொலைக்காட்சிகளும், சமூக வலைத்தளங்களும் அவரது பாடல்கள் மற்றும் அவரைப் பற்றிய அறிய தகவல்களையும் வெளியிட்டு வருகின்றன. இதில் ‘கேளடி கண்மணி’ படம்

வெளிவந்து 25 ஆண்டுகள் கழித்து ஒரு விழா மேடையில் அவர் பேசிய பேச்சு வெளியாகியுள்ளது அந்த விழாவில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பேசும் போது கேளடி கண்மணி படத்தில் வரும் மண்ணில் இந்தக் கதாலன்றி பாடலை தான் மூச்சு விடாமல் பாடவில்லை என்றும்..அஜித் நடித்த ‘அமர்க்களம்’ படத்தில் “சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்” என்ற பாடலைத்தான் மூச்சு விடாமல் பாடியதாகவும் சொல்லியிருக்கிறார். –இர.சுபாஸ் சந்திர போஸ