×

பொதுமக்களே உஷார்! எஸ்.பி.ஐ வங்கி 4 நாட்கள் இயங்காது!!

 

60 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக எஸ்.பி.ஐ. வங்கி ஊழியர்கள் முன்னெடுக்கும் போராட்டத்தால், 4 நாட்கள் தொடர்ந்து வங்கிப் பணிகள் பாதிக்கப்படும் என ஊழியர்கள் அறிவித்துள்ளனர்

பணியாளர்கள் தேர்வு முறையை மாற்றக் கோரியும், பாதுகாவலர்கள் நியமிக்கப்படாததைக் கண்டித்தும் கோவையில் எஸ்.பி.ஐ. வங்கி ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். எஸ்.பி.ஐ. வங்கியில் பாதுகாவலர்கள் நியமனம் கடந்த சில ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இதனால் வங்கியில் பணியாற்றுவோருக்கு பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டுள்ளதாகவும் ஊழியர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த சூழலில், பாதுகாவலர்களை நியமித்தல், பியூன் பணியிடங்களை அரசுப் பணியிடங்களாக நிரப்புதல் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, எஸ்.பி.ஐ. வங்கி ஊழியர்கள் வரும் மே 24 மற்றும் 25ஆம் தேதிகளில் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

இதனிடையே, எஸ்.பி.ஐ. வங்கி ஊழியர்கள் சங்கத்தின் கோவை மண்டலம் சார்பில், கோவை தலைமை அலுவலகத்தில் ஊழியர்கள் இன்று அடையாள தர்ணா போராட்டம் நடத்தினர். இதில், 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கருப்பு நிற உடை அணிந்து காலை முதல் மாலை வரை தர்ணாவில் ஈடுபட்டனர்.