கல்யாண வீட்ல புலம்புற ஒரே கரகாட்ட கோஷ்டி திமுக தான் - சவுக்கு சங்கர்
சென்னை முன்னாள் காவல் ஆணையர் அருணுக்கு எதிராக யூடியூபர் சவுக்கு சங்கர் முறையீடு செய்துள்ளார்.சிபிஐ விசாரணை கோரும் எனது மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும் என்றும் முன்னாள் காவல் ஆணையர் அருண் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளார் எனவும் யூடியூபர் சவுக்கு சங்கர் கூறியுள்ளார். மேலும் குண்டர் சட்டத்தை தவறாக பயன்படுத்தியதாகவும் சென்னை முன்னாள் காவல் ஆணையர் அருணுக்கு எதிராகவும் யூடியூபர் சவுக்கு சங்கர் முறையீடு செய்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சவுக்கு சங்கர், “கல்யாண வீட்டுல போய் புலம்புற ஒரே கரகாட்ட கோஷ்டி திமுக தான். விஜய்க்கு பதில் சொல்லணும்னா வெளிய போய் பத்திரிக்கையாளர் சந்திப்புல சொல்லுயா, பெரிய மனுஷன்னு உன்ன கல்யாணத்துக்கு கூப்டா முதலமைச்சர் அவர்களே, என்ன சட்ட சபைல தேடாதீங்க, நான் மகளிர் உரிமை தொகைல இருக்கேன். நான் தான் முதலமைச்சர்னு பேசிட்டு இருக்க. கல்யாண ஆன பொண்ணு மாப்பிளை என்னடா பண்ணுவாங்க, அவங்க எதுக்குடா இதெல்லாம் கேட்கணும். விஜய் முதல்வர் நாற்காலியில் அமர்ந்ததை அவர்களால் பொறுக்கமுடியவில்லை. முதல்வர் விஜய் அவர்கள் ‘அப்பாவை காணும்’ என்று ஒரு வார்த்தை சொன்னதும் வெந்த புண்ணில் மிளகாய் பொடியை தைத்தது போல் துடிக்கிறார்கள். அந்த டததிமுகவின் மாபெரும் தோல்வியில் நாங்கள் ஒரு பெரும் பங்கு ஆற்றிருக்கிறோம்” என்றார்