“என் வீட்டில் ஊற்றப்பட்ட மலம் அல்ல, தமிழக அரசின் மீது ஊற்றப்பட்ட மலம்”- சவுக்கு சங்கர்
Mar 24, 2025, 19:44 IST
என் வீட்டில் ஊற்றப்பட்ட மலம் அல்ல, தமிழக அரசின் மீது ஊற்றப்பட்ட மலம் என ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் கூறியுள்ளார்.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் வசித்து வருபவர் ஊடகவியலாளர் சவுக்கு சங்கர். யூடியூபில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக இவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட நிலையில், இவருக்கு எதிராக சில வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து, ஜாமின் பெற்று வெளியே வந்த இவர், தொடர்ந்து யூடியூபில் சர்ச்சைக்குரிய வகையில் வீடியோ பதிவிட்டுவருகிறார். தூய்மைப் பணியாளர்கள் குறித்து அவதூறாக பேசியதாகக் கூறி இவர் வீட்டின் மீது இன்று (மார்ச் 24) காலை தாக்குதல் நடத்தப்பட்டதாக சவுக்கு சங்கர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டார்.