×

அருண் ஐபிஎஸ் மீது புகாரளித்த சவுக்கு சங்கர்!

 

முன்னாள் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் அருண் மற்றும் அவரது மனைவி யமுனா தேவி ஐ.ஆர்.எஸ்., மற்றும் இவர்களின் மகள்கள் சார்வியா அருண், இனியா அருண் ஆகியோர் மீது சொத்துக்குவிப்பு வழக்கு தொடர வேண்டும் என்று லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் வந்து மனு அளித்துள்ளார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சவுக்கு சங்கர், “அருண் நூற்றுக்கணக்கான கோடி சொத்துக்களை சட்டவிரோதமாகச் சேர்த்துள்ளார், லஞ்சம் வாங்கி பணத்தை அடித்துக் குவித்து வைத்துள்ளார். சென்னை மாநகர காவல்துறை ஆணையராக இருந்தபோது ரவுடிகளுடன் தொடர்புகொண்டு கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு, போலி என்கவுண்டர் என்ற பெயரில் கொலைகளைச் செய்துள்ளார். அவர் மீது தொடர்ந்து விசாரணை நடத்த வேண்டும். புதிய ஆட்சி வந்த பிறகு அருண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. அவர் மீதான லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் நியமனம் இந்த துறைக்கு மிகப்பெரிய அவமானம்.  இடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரி அருண் பல்வேறு ஊழல் செய்தவர், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக முதல்வர் மீது நம்பிக்கை இருக்கு நடவடிக்கை எடுப்பார்.” என்றார்.