×

சவுக்கு சங்கரின் 13 வயது மகன் தற்கொலை

 

ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் ஒரே  மகன் தியோ உயிரிழந்தார். 

சவுக்கு சங்கர் மற்றும் நிலவுமொழி செந்தாமரை தம்பதியின் ஒரே மகனான 13 வயது தியோ இன்று உயிரிழந்தார். தம்பதி இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். மகன் தியோ நிலவுமொழியோடு வசித்தார். இந்நிலையில் தியோ இன்று தற்கொலை செய்துகொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினர் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.