×

சவுக்கு சங்கர் கடலூர் சிறைக்கு மாற்றம்

 

நிர்வாக காரணங்களுக்காக சவுக்கு சங்கர் கடலூர் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

யூட்யூபர் சவுக்கு சங்கர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதன் குறித்து அவதூறு கருத்துக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.  அத்துடன் நீதித்துறை முழுவதும் ஊழலில் சிக்கி உள்ளது என்று சவுக்கு சங்கர் கூறியிருந்தார்.   ரெட் பிக்ஸ் யூட்யூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில் , ஒட்டுமொத்த நீதித்துறை முழுவதும் ஊழல் சிக்கி உள்ளது என்று பேட்டி கொடுத்தீர்கள்.  பல பேட்டி மற்றும் பதிவுகளில் சென்னை உயர்நீதிமன்றம் சில நீதிபதிகளின் பரம்பரை சொத்து என பாதித்து செயல்படுகின்றனர்.  சில நீதிபதிகளுக்கு ஒன்றுகூட தெரியவில்லை.  ஒரு வழக்கில் மூத்த வழக்கறிஞர் ஆஜராகிறார். அவரே தீர்ப்பையும் எழுதுகிறார் என நீதித்துறை குறித்தும் ,  நீதிபதிகள் குறித்தும் அவதூறாக பேச இருந்தார். இதன் காரணமாக சவுக்கு சங்கர் மீது உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன் வந்து வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில் சவுக்கு சங்கர் மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையாக 6 மாத கால சிறை தண்டனை வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்தது.  சவுக்கு சங்கருக்கு 6 மாத கால சிறை தண்டனை வழங்கி நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி அமர்வு உத்தரவிட்டதை தொடர்ந்து அவர் மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். 

இந்நிலையில் ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சவுக்கு சங்கர் மதுரை சிறையில் இருந்து கடலூர் சிறைக்கு மாற்றப்பட்டார். நிர்வாக காரணங்கள்,  அச்சுறுத்தலால் சவுக்கு சங்கர் மதுரை சிறையில் இருந்து மாற்றப்பட்டதாக சிறைத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.