#BREAKING சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை
யுடியூபர் சவுக்கு சங்கர், பெண் செய்தி வாசிப்பாளர் குறித்து ஆபாசமாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், சென்னை எழும்பூர் கூடுதல் மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட் சிவசக்தி, விசாரணை நடத்தி, சங்கருக்கு 3 ஆண்டுகள் தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்தார்.
கடந்த 2013-ம் ஆண்டில், செய்தி வாசிப்பாளர் மகாலட்சுமி குறித்து 'சவுக்கு.நெட்' இணையதளத்தில் அவதூறான மற்றும் தவறான கட்டுரைகள் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டதாகக் கூறி, சவுக்கு சங்கர் மற்றும் பணிமலர் ஆகியோருக்கு எதிராக மகாலட்சுமி எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். சவுக்கு சங்கர் தன்னை மிரட்டி ரூ.50 லட்சம் பணம் கேட்டதாகவும், ஊடகங்களுக்கு அளித்த பேட்டிகளில் மகாலட்சுமி குறிப்பிட்டிருந்தார். நீண்ட வருடங்களாக நடந்து வந்த இந்த வழக்கில், செப்டம்பர் 29, 2026 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டு சவுக்கு சங்கர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் ரூ.20 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை எழும்பூர் கூடுதல் தலைமை பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில், சவுக்கு சங்கர் மீது தொடரப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. IPC 509 மற்றும் தமிழ்நாடு பெண்களை துன்புறுத்தல் தடுப்புச் சட்டம் பிரிவு 4 ஆகிய இரு பிரிவுகளிலும் அவர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு, 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.