“விஜய் ஆர்வக்கோளாறில் அரசியலுக்கு வந்துள்ளார்”- நடிகர் சத்யராஜ்
விஜய் நடனம் ஆடுகிறார், நன்றாக நடிக்கிறார் என்றால் நாம் அவரை சினிமாவிலேயே வைத்திருப்பது நல்லது. மத்திய அரசிடம் இருந்து ஒரு சத்தம் வந்தாலே விஜய் ஒளிந்து கொள்வார் என நடிகர் சத்யராஜ் கடுமையான விமர்சனத்தை முன் வைத்தார்.
அம்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் சட்டமன்ற வேட்பாளர் பூர்ணிமாவை ஆதரித்து திரைப்பட நடிகர் சத்யராஜ் பிரச்சாரம் மேற்கொண்டார். அம்பத்தூர் கொரட்டூர் பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்ட மேடையில் நின்றவாறு கட்சியினர் மற்றும் பொதுமக்களிடையே தீவிர வாக்கு சேகரிப்பு ஈடுபட்டனர். நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல, மண்டல குழு தலைவர் பி கே மூர்த்தி, பகுதி செயலாளர் நாகராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
திரைப்பட நடிகர் சத்யராஜ் அம்பத்தூர் திமுக வேட்பாளர் டாக்டர் பூர்ணிமாவை ஆதரித்து பொதுமக்களிடையே பேசும்போது, “தொகுதி மறு வரை மசோதாவில் பாஜகவை எதிர்த்து முதலமைச்சர் தோற்கடித்துள்ளார் இதனால் மத்திய அரசு ஆடி போய் உள்ளது. நாம் யாருக்கும் அடிப்படையவும் மாட்டோம் தலைகுனியவும் மாட்டோம். மத்திய அரசிற்கு யாரேனும் அடிபணிந்து தலை குனிந்தால் அப்படிப்பட்ட அமைதிப்படை அமாவாசைகளை ஒதுக்கிவிட வேண்டும். அதி உன்னதமான தலைவன் ஆரம்பித்த அதிமுக தைரியமான ஜெயலலிதா வளர்த்தெடுத்த கட்சியை காலில் விழுந்து எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சரானார். ஆனால் ஜெயலலிதா ஓபிஎஸை தான் முதலமைச்சர் ஆக்கி இருப்பார். பாஜக மத சண்டையை உருவாக்கி தமிழ்நாட்டில் குளிர்காய நினைத்துக் கொண்டிருக்கிறது எந்த மாநிலத்தில் வேண்டுமானாலும் அப்படி செய்யலாம் தமிழ்நாட்டில் அப்படி செய்ய முடியாது எனக் கூறினார். கரூர் துயரத்தில் விஜய் முதலமைச்சர், திமுகவையும் குற்றம் சொல்லிய நிலையில் சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய்க்கு ஆதரவாகவே பேசினார். தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை தலைவராக பெரியாரையும் அம்பேத்கரையும் கூறுகிறீர்கள் அதை உங்களது தொண்டர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். யார் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தாலும் எம்ஜிஆர் என கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. சினிமாவில் நாம் நடித்துள்ளதை பார்த்து மக்கள் நம் மீது அன்பாக உள்ளனர். சினிமா துறையில் ஒப்பிடும்போது என்னை விட விஜய் உயர்ந்த இடத்தில் உள்ளார். விஜயை எனக்கும் பிடிக்கும் அவரது திரைப்படத்தை நானும் திரையரங்கில் குடும்பத்துடன் பார்ப்போம் சினிமாவில் விஜய் நன்றாக நடிக்கிறார் நடனமாடுகிறார் என்றால் நாம் அவரை சினிமாவிலேயே வைத்திருப்பது நல்லது விஜய் ஆர்வக்கோளாறில் அரசியலுக்கு வந்துள்ளார். நம்முடைய முதலமைச்சரை போல் மத்திய அரசை எதிர்த்து சண்டை செய்ய முடியுமா..? மத்திய அரசில் இருந்து ஒரு சத்தம் வந்தாலே விஜய் ஓடி ஒளித்து கொள்வார். அதை எதிர்ப்பதற்கான ஒரு ஆளு வேண்டும் அவர் நம்முடைய அமைச்சர் தான்” என கூறினார்