“பெண் என்றும் பார்க்காமல் ஆபாசமாக பேசுகிறார்கள்”- மேடையில் கதறி அழுத சத்தியபாமா
திமுகவுடன் டீலிங் செய்யாமல் இருந்திருந்தால் அதிமுகவிலிருந்து என்னால் வெளியே வந்திருக்க முடியாது என தவெக வேட்பாளர் சத்தியபாமா கூறியுள்ளார்.
தாராபுரம் பிரசாரத்தில் பேசிய தவெக வேட்பாளர் சத்தியபாமா, “என்னை பெண் என்றும் பார்க்காமல், வலைதளங்களில் அவதூறு செய்கிறார்கள். 2 மாதமாக செல்போன் பார்க்கவில்லை.. நான் என்ன செய்தேன்? திமுகவால் நான் பாதிக்கப்பட்டேன்; அதோடு சேர்ந்ததால் தான் நான் வெளியே வந்தேன்... என்னிடம் தவறு இருந்தால், நான் துணிச்சலாக ஓட்டு கேட்டு வர முடியுமா? ஒரு பெண் என்றும் பார்க்காமல் ஆபாசமாக பேசுகிறார்கள். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். திமுகவுடன் டீலிங் செய்யாமல் இருந்திருந்தால் அதிமுகவிலிருந்து என்னால் வெளியே வந்திருக்க முடியாது. எம்ஜிஆர் வரும் போது இரு நாட்கள் மக்கள் காத்திருப்பார்கள் என்று என் அப்பா சொல்வார். இன்று விஜய், எம்ஜிஆர்.,யின் மறுபிறவியாக இருக்குமோ என்று தோன்றுகிறது. அப்படிப்பட்ட தலைவரிடம் வந்ததற்கு பெருமை கொள்கிறேன். ஈபிஎஸ் திமுக உடன் உடன்பாடு செய்யவில்லை என்றால், நான் இந்த இயக்கத்திற்கு வந்திருக்க முடியாது" என்றார்.