×

சாத்தான்குளம் போலீஸ் பால்ராஜ் மரணம்… கொலை வழக்கில் அவருக்கு தொடர்பில்லை என்று அறிவிக்க மனைவி கோரிக்கை!

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சிறப்பு காவல் ஆய்வாளர் பால்ராஜ் மரணம் அடைந்தார். தந்தை, மகன் கொலை வழக்கில் அவருக்கு தொடர்பில்லை என்று அறிவித்தால் மட்டுமே உடலை பெறுவோம் என்று அவர் மனைவி கூறியுள்ளார். சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த பென்னிக்ஸ், ஜெயராஜை சாத்தான்குளம் போலீசார் கைது செய்து லாக்அப்பில் வைத்து கொடூரமாக தாக்கினர். இதனால் இருவரும் உயிரிழந்தனர். இது தொடர்பான வழக்கை சி.பி.ஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் சாத்தான்குளம்
 

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சிறப்பு காவல் ஆய்வாளர் பால்ராஜ் மரணம் அடைந்தார். தந்தை, மகன் கொலை வழக்கில் அவருக்கு தொடர்பில்லை என்று அறிவித்தால் மட்டுமே உடலை பெறுவோம் என்று அவர் மனைவி கூறியுள்ளார்.


சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த பென்னிக்ஸ், ஜெயராஜை சாத்தான்குளம் போலீசார் கைது செய்து லாக்அப்பில் வைத்து கொடூரமாக தாக்கினர். இதனால் இருவரும் உயிரிழந்தனர். இது தொடர்பான வழக்கை சி.பி.ஐ விசாரித்து வருகிறது.


இந்த வழக்கில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் சிறப்பு சார் ஆய்வாளராக பணியாற்றி வந்த பால்ராஜ் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
அவருக்கு கொரோனாத் தொற்று உறுதியானதைத் தொடர்ந்து மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது உடல்நிலை மோசமானதால் கடந்த 8ம் தேதி அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், மதுரை ராஜாஜி மருத்துவமனையில்

பால்ராஜ்க்கு சரியான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று அவரது மனைவி மங்கையர்திலகம் புகார் கூறியிருந்தார். எனவே, அவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை வழங்க அனுமதிக்க வேண்டும் என்று மதுரை மாநகர் போலீஸ் கமிஷனரிடம் மனு அளித்திருந்தார். இந்த நிலையில் அவர் இன்று காலை உயிரிழந்துள்ளார்.


இது குறித்து மங்கையர்திலகம் கூறுகையில், “என் கணவருக்கும் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் நிகழ்ந்த தாக்குதல் சம்பவத்துக்கும் தொடர்பு இல்லை என்று கூறினால் மட்டுமே அவரது உடலை பெற முடியும். என் கணவர் உயிரிழப்புக்கு சாத்தான்குளம் காவல்நிலைய காவலர்கள் சிலர்தான் காரணம்” என்றார்.
பால்ராஜ் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தால் அவரது உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. அவரது உடல் மதுரையில் உள்ள இடுகாட்டில் அரசு விதிமுறைகள் படி அடக்கம் செய்யப்படும் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.