×

உயிரிழந்த தந்தை, மகனுக்கு திடீர் கொரோனா பரிசோதனை… பிரேத பரிசோதனை மையத்துக்கு வந்த மாஜிஸ்திரேட்!

சாத்தான்குளத்தைச் சேர்ந்த செல்போன் கடை உரிமையாளர்கள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பிரேத பரிசோதனை மையத்துக்கு வந்தார். உயிரிழந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருப்பது பரபரப்பையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சாத்தான்குளத்தில் சொல்போன் கடை வைத்திருந்த தந்தை, மகன் இருவரும் இரவு 8 மணிக்கு மேல் கடையை திறந்து வைத்தது தொடர்பாக கைது செய்யப்பட்டு கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர். அங்கு இருவரும் மர்மமான முறையில் உயிரிழந்தனர். போலீசார்தான் அவர்களை அடித்து கொன்றுவிட்டதாக சாத்தான்குள மக்கள்
 

சாத்தான்குளத்தைச் சேர்ந்த செல்போன் கடை உரிமையாளர்கள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பிரேத பரிசோதனை மையத்துக்கு வந்தார். உயிரிழந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருப்பது பரபரப்பையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சாத்தான்குளத்தில் சொல்போன் கடை வைத்திருந்த தந்தை, மகன் இருவரும் இரவு 8 மணிக்கு மேல் கடையை திறந்து வைத்தது தொடர்பாக கைது செய்யப்பட்டு கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர். அங்கு இருவரும் மர்மமான முறையில் உயிரிழந்தனர். போலீசார்தான் அவர்களை அடித்து கொன்றுவிட்டதாக சாத்தான்குள மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.


இந்த விவகாரம் தொடர்பாக தாமாக முன்வந்து வழக்கை பதிவு செய்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை, தூத்துக்குடி எஸ்.பி உள்ளிட்டவர்கள் வீடியோ கான்பரன்ஸிங் முறையில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டனர். பிரச்னை தீவிரமடையவே, கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பாரதிதாசன் தந்தை, மகன் உடல் வைக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிரேத பரிசோதனை மையத்துக்கு இன்று வந்து ஆய்வு மேற்கொண்டார். மருத்துவக் கல்லூரி முதல்வர், பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்களுடன் அவர் விசாரணை நடத்தினார்.

இதற்கிடையே உயிரிழந்த ஜெபராஜ், பென்னிக்ஸ்க்கு கொரோனா தொற்று உள்ளதா என்று ஆய்வு செய்வதற்கான பரிசோதனையை மருத்துவர்கள் மேற்கொண்டுள்ளனர். அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானால் உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்படாது. அரசே அவர்கள் இறுதிச் சடங்கை செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.