×

சாத்தான்குளம் சம்பவம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் விசாரிக்க வேண்டும்! – உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

சாத்தான்குளத்தில் தந்தை, மகன் கொலை தொடர்பான வழக்கில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக வழக்கறிஞர் ராஜராஜன் என்பவர் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில், “சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக விசாரணை தொடங்கும் முன்னரே முதலமைச்சர் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் தவறான தகவல் இடம் பெற்றிருந்தது. ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் உடல் நலக் குறைவு காரணமாக இறந்ததாக முன்னுக்குப்
 

சாத்தான்குளத்தில் தந்தை, மகன் கொலை தொடர்பான வழக்கில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக வழக்கறிஞர் ராஜராஜன் என்பவர் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில், “சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக விசாரணை தொடங்கும் முன்னரே முதலமைச்சர் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் தவறான தகவல் இடம் பெற்றிருந்தது. ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் உடல் நலக் குறைவு காரணமாக இறந்ததாக முன்னுக்குப் பின் முரணான தகவலை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து வருகிறார்.

மூச்சுத் திணறல் காரணமாகத்தான் உயிரிழப்பு ஏற்பட்டது என்று முதலமைச்சர் கூறியதால் அவரையும் இந்த வழக்கில் விசாரிக்க வேண்டும். இதற்கான உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார். இந்த வழக்கு நாளைக்கு விசாரணைக்கு வருகிறது. இந்த மனு ஏற்கப்படுமா இல்லையா என்பது நாளை தெரியும்.