×

சாத்தான்குளம் வழக்கு: காவலர்களுக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்!

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை மகனான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஊரடங்கு நேரத்தில் கடையை திறந்து வைத்திருந்ததால், காவலர்களால் சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டனர். இவர்களின் மரணம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, வழக்கில் சம்பந்தப்பட்ட 10 காவலர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களுள் காவலர் பால்துரை அண்மையில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். எஞ்சியிருக்கும் 9 காவலர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு விசாரணையை கையிலெடுத்த
 

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை மகனான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஊரடங்கு நேரத்தில் கடையை திறந்து வைத்திருந்ததால், காவலர்களால் சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டனர். இவர்களின் மரணம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, வழக்கில் சம்பந்தப்பட்ட 10 காவலர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களுள் காவலர் பால்துரை அண்மையில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். எஞ்சியிருக்கும் 9 காவலர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கு விசாரணையை கையிலெடுத்த சிபிஐ அதிகாரிகள், தந்தை மகன் கொலையில் பல தகவல்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தனர். காவலர்களால் தான் அவர்கள் உயிரிழந்ததாக நீதிமன்றத்தில் பகிரங்கமாக அறிவித்த சிபிஐ, அவர்களுக்கு ஜாமீன் கிடைக்காத வண்ணம் தடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், சாத்தான்குள வழக்கில் காவலர்களுக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அந்த குற்றப்பத்திரிகையிலும், காவலர் ஸ்ரீதர் உட்பட எல்லாரும் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் வழக்கில் குற்றவாளிகள் என குறிப்பிட்டுள்ளது.