×

சாத்தான்குளம் தந்தை, மகன் வழக்கு… சி.பி.ஐ அதிகாரிகள் ஏழு பேர் வருகை!

சாத்தான்குளம் தந்தை, மகனை போலீசாரே அடித்து கொலை செய்த வழக்கில் சி.பி.ஐ இன்று தன்னுடைய விசாரணையைத் தொடங்க உள்ளது. இதற்காக ஏழு பேர் கொண்ட சி.பி.ஐ குழு டெல்லியில் இருந்து வந்துள்ளது. சாத்தான்குளம் தந்தை, மகன் போலீஸ் காவலில் அடித்து சித்ரவதை செய்யப்பட்டதாகவும், ரிமாண்ட் செய்யப்பட்ட அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக இறந்ததாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளை விசாரணை நடத்தியதை தொடர்ந்து போலீசார் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
 

சாத்தான்குளம் தந்தை, மகனை போலீசாரே அடித்து கொலை செய்த வழக்கில் சி.பி.ஐ இன்று தன்னுடைய விசாரணையைத் தொடங்க உள்ளது. இதற்காக ஏழு பேர் கொண்ட சி.பி.ஐ குழு டெல்லியில் இருந்து வந்துள்ளது.


சாத்தான்குளம் தந்தை, மகன் போலீஸ் காவலில் அடித்து சித்ரவதை செய்யப்பட்டதாகவும், ரிமாண்ட் செய்யப்பட்ட அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக இறந்ததாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளை விசாரணை நடத்தியதை தொடர்ந்து போலீசார் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் 10 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது இந்த வழக்கை சி.பி.ஐ-யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. விஜய் சுக்லா தலைமையிலான சி.பி.ஐ அதிகாரிகள் தூத்துக்குடிக்கு வந்துள்ளனர். டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் சுக்லா தலைமையில் ஏழு அதிகாரிகள் தூத்துக்குடி வந்துள்ளனர்.

மாவட்ட முதன்மை நீதிபதி முன்னிலையில் சி.பி.சி.ஐ.டி போலீசார் வழக்கு தொடர்பான ஆவணங்களை சி.பி.ஐ அதிகாரிகளிடம் விசாரிக்க உள்ளனர். சி.பி.சி.ஐ.டி டி.எஸ்.பி அனில்குமார் இந்த ஆவணங்களை வழங்க உள்ளார். ஆவணங்களை ஆய்வு செய்து தொடக்கத்திலிருந்து சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணையைத் தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.