×

சாத்தான்குளம் விவகாரம்: கொலை வழக்காக பதிவு செய்தது சிபிசிஐடி! குற்றவாளிகள் கைது

தமிழகத்தையே உலுக்கியுள்ள சாத்தான்குளம் விசாரணை கைதிகளான தந்தை – மகன் இருவரும் போலீசாரால் அடித்து கொல்லப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விசாரணைக்காக போலீஸ் ஸ்டேஷன் அழைத்து செல்லப்பட்ட அவர்கள் ஆசனவாயில் ரத்தம் சொட்டிய படி உடலில் பல காயங்களுடன் இறந்தனர். இந்த சம்பவத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த வழக்கில் சமர்பிக்கப்பட்ட முதல் தகவல் அறிக்கை மற்றும் சிசிடிவி கேமரா காட்சிகளின் முரண்பாடு இருக்கிறது. அது மட்டுமல்லாமல், உடலில் மோசமான காயங்கள் இருந்தது பிரேத பரிசோதனை அறிக்கையில்
 

தமிழகத்தையே உலுக்கியுள்ள சாத்தான்குளம் விசாரணை கைதிகளான தந்தை – மகன் இருவரும் போலீசாரால் அடித்து கொல்லப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விசாரணைக்காக போலீஸ் ஸ்டேஷன் அழைத்து செல்லப்பட்ட அவர்கள் ஆசனவாயில் ரத்தம் சொட்டிய படி உடலில் பல காயங்களுடன் இறந்தனர். இந்த சம்பவத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த வழக்கில் சமர்பிக்கப்பட்ட முதல் தகவல் அறிக்கை மற்றும் சிசிடிவி கேமரா காட்சிகளின் முரண்பாடு இருக்கிறது. அது மட்டுமல்லாமல், உடலில் மோசமான காயங்கள் இருந்தது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது. தந்தை, மகன் உயிரிழந்த இந்த விவகாரத்தில் சிபிசிஐடி போலீசார் உடனடியாக விசாரணையை கையிலெடுக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டதன் பேரில், 10 குழுக்களாக பிரிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை மகன் உயிரிழந்த விவகாரத்தில் கொலை வழக்காக சிபிசிஐடி பதிவு செய்தது. கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் கைது செய்யப்பட்டதாகவும் சிபிசிஐடி போலீசார் தெரிவித்தனர்.மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய 6 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், மீதமுள்ளவர்களை கைது செய்ய 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.