×

சாத்தான்குளம் விவகாரம்… உண்மை வெளிப்படும்போது உரிய நடவடிக்கை! – அமைச்சர் உதயகுமார் உறுதி

சாத்தான் குளம் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. உண்மை வெளிப்படும்போது தவறு செய்தவர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். சென்னை புளியந்தோப்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 1400 படுக்கை வசதி கொண்ட கொரோனா சிறப்புப் பிரிவை தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று பார்வையிட்டார். அப்போது அங்கிருந்த நிருபர்களிடம் அவர் பேசும்போது, “கொரோனா ஏற்படுத்தி வரும் சவால்களை வெல்ல ஊக்கம் தர வேண்டும். களப் பணியாற்றி வருபவர்களை ஊக்குவிப்பதுதான் தற்போது
 

சாத்தான் குளம் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. உண்மை வெளிப்படும்போது தவறு செய்தவர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
சென்னை புளியந்தோப்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 1400 படுக்கை வசதி கொண்ட கொரோனா சிறப்புப் பிரிவை தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று பார்வையிட்டார். அப்போது அங்கிருந்த நிருபர்களிடம் அவர் பேசும்போது, “கொரோனா ஏற்படுத்தி வரும் சவால்களை வெல்ல ஊக்கம் தர வேண்டும். களப் பணியாற்றி வருபவர்களை ஊக்குவிப்பதுதான் தற்போது மிக அவசியம். இதிலிருந்து மீண்டு வந்த பிறகு அரசியல், அறிக்கைகள் விட்டுக்கொள்வதுதான் சரி.

மக்களைக் காப்பாற்ற ராணுவ வீரர் போல முதலமைச்சர் களப்பணியாற்றி வருகிறார். தமிழகத்தில் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உள்ளது. அதே சமயம் சில தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது. தளர்வுகளை முறையாக பின்பற்றாத மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது” என்றார்.
சாத்தான்குளத்தில் தந்தை, மகன் போலீசார் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தது பற்றி அவரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு உதயகுமார், “சாத்தான்குளத்தில் இருவர் உயிரிழந்தது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. விசாரணையில் உண்மை வெளிவரும்போது தவறு செய்தவர்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்கும்” என்றார்.