×

வெற்றி வாய்ப்பை தவற விட்டவர்கள் மீண்டும் முயற்சித்து தேர்ச்சி பெறுக - சசிகலா 

 

10 மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சசிகலா வாழ்த்து கூறியுள்ளார்.

தமிழகத்தில் 10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியது.   இதில் பதினோராம் வகுப்பு பொது தேர்வு எழுதிய மாணவர்கள் 90.93 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய 7 லட்சத்து 76 ஆயிரத்து 844 மாணவ மாணவிகளில் 7,6413 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேபோல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 91.39% பேர் தேர்ச்சி அடைந்துள்ள நிலையில்  மாணவர்களை விட மாணவியர் 6.50 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். பத்தாம் வகுப்பில் மாணவியர்கள் 4,30,710 பேரும் மாணவர்கள் 4 லட்சத்து 4 ஆயிரத்து 904 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் தேர்ச்சி விகிதம் 94.66%, மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 88.16% ஆகவும் பதிவாகியுள்ளது.

இந்நிலையில் சசிகலா தனது ட்விட்டர் பக்கத்தில், "10 மற்றும் 11-ஆம் வகுப்பு பொதுதேர்வில், தேர்ச்சி பெற்ற மாணவச் செல்வங்களுக்கு என் இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இத்தேர்வில் தற்சமயம் வெற்றி வாய்ப்பை தவற விட்டவர்கள், அதைப்பற்றி கவலை படாமல், எதிர்மறை சிந்தனைகளை தவிர்த்துவிட்டு, தன்னம்பிக்கையோடும், தைரியமாகவும் இருந்து மீண்டும் முயற்சித்து தேர்ச்சி பெறவேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

null